'இன்பார்மரை' காட்டிக்கொடுத்த போலீஸ் எஸ்.ஐ., 'துாக்கியடிப்பு'
'இன்பார்மரை' காட்டிக்கொடுத்த போலீஸ் எஸ்.ஐ., 'துாக்கியடிப்பு'
ADDED : பிப் 19, 2025 12:57 AM
மதுரை:மதுரை, பழங்காநத்தம் ரேஷன் கடையில் கடந்த மாதம் ரேஷன் அரிசி கடத்தப்பட்டது. இதை அங்கு பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் வீடியோ எடுத்து, சமூக ஆர்வலருக்கு அனுப்பினார். அவர் உணவுக்கடத்தல் தடுப்புப்பிரிவு எஸ்.ஐ., ஒருவருக்கு மட்டும் வீடியோவை அனுப்பினார்.
சிறிது நேரத்தில் அந்த பெண்ணை தேடி வந்த கடத்தல்காரர்கள், மிரட்டி, வீடியோ எடுத்த மொபைல் போனை பறித்துச்சென்றனர். இதனால் சமூக ஆர்வலருக்கு எஸ்.ஐ., மீது சந்தேகம் ஏற்பட்டது. உயர் அதிகாரிகள் கவனத்திற்கு சென்றதை தொடர்ந்து, சமூக ஆர்வலரிடம், டி.எஸ்.பி., செந்தில் இளந்திரையன் விசாரித்தார். எஸ்.ஐ., மீது துறை ரீதியான விசாரணை நடந்த நிலையில், நேற்று முன்தினம் அவர் அப்பிரிவில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
நிர்வாக காரணம் எனக்கூறி, அப்பிரிவு இன்ஸ்பெக்டர் வனிதா சென்னைக்கும், எஸ்.ஐ., சிவபிரகாசம் மதுரைக்கும் மாற்றம் செய்யப்பட்டனர்.

