உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : நவ 03, 2026 04:15 AM

அ நிறம் | அளவு
காரைக்கால்: புதுச்சேரி மாநிலம், காரைக்காலில், சுப்ரமணியன், 59, எஸ்.பி.,யாக பணியாற்றியபோது, 28 வயது பெண் போலீசுடன் பழக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து, பெண் போலீசின் கணவர், சீனியர் எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து, சுப்ரமணியன் செப்., 25ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவில், காரைக்கால் நகர போலீசார், எஸ்.பி., மீது, 7 பிரிவுகளில் வழக்கு பதிந்தனர். அக்., 28ல் சுப்ரமணியன், உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் பெற்றார். நேற்று காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
நவ., 16 வரை தினமும் காரைக்கால் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகி, சுப்ர மணியன் கையெழுத்திட, நீதிபதி உத்தரவிட்டார்.
