sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஜிப்லி போட்டோக்களால் சைபர் குற்றங்களுக்கு ஆளாகும் அபாயம்: போலீசார் எச்சரிக்கை

/

ஜிப்லி போட்டோக்களால் சைபர் குற்றங்களுக்கு ஆளாகும் அபாயம்: போலீசார் எச்சரிக்கை

ஜிப்லி போட்டோக்களால் சைபர் குற்றங்களுக்கு ஆளாகும் அபாயம்: போலீசார் எச்சரிக்கை

ஜிப்லி போட்டோக்களால் சைபர் குற்றங்களுக்கு ஆளாகும் அபாயம்: போலீசார் எச்சரிக்கை

1


ADDED : ஏப் 09, 2025 05:10 PM

Google News

ADDED : ஏப் 09, 2025 05:10 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ஜிப்லி போட்டோக்களால் சைபர் குற்றங்களுக்கு ஆளாகும் அபாயம் உள்ளது என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இணையவாசிகளிடையே தற்போது டிரெண்டாக உள்ளது ஜிப்லி போட்டோ. அனைவரும் ஏ.ஐ., தொழில்நுட்பம் முலம் தங்களது படங்களை ஜிப்லி போட்டோவாக மாற்றி சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு, ஒரு பக்கம் இணைய வாசிகள் மத்தியில் வரவேற்பு இருந்தாலும், மறுபக்கம் விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இந்நிலையில் ஜிப்லி ஆர்வலர்களுக்கு சைபர் கிரைம் போலீசார் உஷாராக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு:

* ஜிப்லி கலையை சுற்றியுள்ள சாத்தியமான ஆபத்துகளை பயனர்கள் குறைத்து மதிப்பிட கூடாது.

* பயனர்கள் தனிப்பட்ட பயோமெட்ரிக் தரவை ஏ.ஐ., செயலிகளிடம் வழங்குகிறார்கள்.சமர்ப்பிக்கப்பட்ட தரவை பயனர்கள் எளிதில் நீக்க முடியாது என்பது கவலைக்குரிய விஷயம்.

* ஜிப்லி போட்டோக்களால் தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் சைபர் குற்றங்களுக்கு ஆளாகும் அபாயம் உள்ளது.

* அங்கீகரிக்கப்படாத ஆப்கள், இணையதளங்களுக்கு புகைப்படங்களை வழங்கும் போது தவறான செயல்களுக்கு பயன்படுத்த வாய்ப்புள்ளது.

* பயோமெட்ரிக் தகவல்களை வைத்து விஷமிகள் வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை கூட திருட முடியும்.

* இதே போன்ற மோசடி நடவடிக்கைகளில் நீங்கள் பாதிக்கப்பட்டிந்தால் அல்லது சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளைக் கண்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க https://cybercrime.gov.in/ என்ற இணையதளத்தில் புகார் அளிக்கவும். இவ்வாறு சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us