குழந்தைகள் இருவர் வெட்டிக்கொலை; மனைவி, இன்னொரு குழந்தை படுகாயம்; தப்பிய நபருக்கு போலீஸ் வலை
குழந்தைகள் இருவர் வெட்டிக்கொலை; மனைவி, இன்னொரு குழந்தை படுகாயம்; தப்பிய நபருக்கு போலீஸ் வலை
UPDATED : பிப் 19, 2025 12:15 PM
ADDED : பிப் 19, 2025 08:30 AM

ஆத்தூர்: ஆத்தூர் அருகே மனைவி, குழந்தைகளை அரிவாளால் வெட்டு படுகொலை செய்துவிட்டு தப்பிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். இரண்டு குழந்தைகள் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே 74, கிருஷ்ணபுரம் கிராமத்தை சேர்ந்த, கூலித் தொழிலாளி அசோக்குமார், 40, இவரது மனைவி தவமணி (38), குழந்தைகள் வித்யதாரணி (13), அருள்பிரகாஷ் (5), அருள்குமாரி (10) மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை அவரது வீட்டிற்கு உறவினர்கள் சென்றபோது, அங்கு தவமணி மற்றும் மூன்று குழந்தைகள் ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் வீட்டிலிருந்துள்ளனர்.
மூவரும் ரத்த காயங்களுடன் வெட்டுப்பட்டு நிலையில், குழந்தைகளான அருள்பிரகாஷ், வித்யதாரணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது.தவமணி மற்றும் குழந்தை அருள்குமாரியை மீட்டு, ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து, ஆத்தூர் டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையிலான கெங்கவல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவான கூலித் தொழிலாளியை தேடி ழவருகின்றனர்.