ADDED : ஆக 22, 2025 03:56 AM
புதுச்சத்திரம்: கூலித் தொழிலாளியை தாக்கி பைக் திருடிய போலீஸ்காரர் உட்பட3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அடுத்த அணுக்கம்பட்டைச் சேர்ந்தவர் அஞ்சாபுலி, 45; கூலித் தொழிலாளி.
இவர், கடந்த 19ம் தேதி இரவு பைக்கில், தியாகவல்லி கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார். புதுச்சத்திரம் அடுத்த கம்பளிமேடு மெயின்ரோடு அருகே சென்றபோது, அடையாளம் தெரியாத மூன்று பேர் அஞ்சாபுலியை கத்தியால் வெட்டி, பைக் மற்றும் மொபைல் போனை திருடிச் சென்றனர்.
இதுகுறித்து அஞ்சாபுலி அளித்த புகாரின்பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து குள்ளஞ்சாவடி அடுத்த அருங்குணம் முருகன் மகன் தினேஷ்குமார், 25; ஆலப்பாக்கம் வி.சி., கட்சி முன்னாள் கவுன்சிலர் நாகலிங்கம், 38; குறிஞ்சிப்பாடி போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் கம்பளிமேடு அடுத்த பூதங்கட்டியைச் சேர்ந்த போலீஸ்காரர் ரவிச்சந்திரன், 35; ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

