ADDED : ஜன 29, 2024 12:05 AM
வீரபாண்டி : இரு தரப்பினர் மோதல் தொடர்பாக, சென்னை, திருவல்லிக்கேணி போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, ரவுடிகள் பாலாஜி, 26, அவரது சகோதரர் அழகுராஜா, 25, விஷ்ணு, 24, ஆகியோரை தேடினர்.
நேற்று முன்தினம் இரவு, இவர்களை திருப்பூர் போலீசார் பிடித்து, சென்னை போலீசாரிடம் ஒப்படைத்தனர். கடந்த, 26ம் தேதி மூவரும் திருப்பூரில் அழகுராஜா காதலியை பார்க்க வந்தனர். நுண்ணறிவு பிரிவு காவலர் ஜெயச்சந்திரன், இவர்கள் கார், பல்லடம் ரோட்டில் நிற்பது குறித்து ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்து விட்டு, கண்காணித்தார்.
மூவரும் புறப்பட்ட போது, 'எங்க அண்ணன் காரை எதற்கு இடித்தீர்கள்' என்று கேட்டு, காரில் வந்தவர்களிடம் பொய்யாக தகராறில் ஈடுபட்டு, காலம் கடத்தி அவர்களை நிற்க வைத்தார். ஒரு கட்டத்துக்கு மேல் போலீஸ் என அறிந்து, அவர்கள் தப்பிக்க முயற்சிக்க, அங்கு வந்த வீரபாண்டி போலீசார் மூன்று பேரையும் பிடித்தனர்.