UPDATED : ஏப் 15, 2025 10:54 AM
ADDED : ஏப் 15, 2025 06:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீஸ்காரரின் தாய் நகைக்காக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் டி.எஸ்.பி., அலுவலகத்தில் விக்ராந்த் என்பவர் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் பணிக்கு சென்ற போது, வீட்டில் தனியாக இருந்த அவரது தாய் வசந்தா, 70, நகைக்காக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
திருமணமாகி பேய்க்குளம் அருகே மீரான்குளத்தில் கணவர் ஈசாக் உடன் வசிக்கும் செல்வரதி, நேற்று இரவு மூதாட்டி வசந்தா வீட்டிற்கு வந்து அவரிடம் பேச்சுக் கொடுத்து நகை பறிப்பில் ஈடுபட்டதோடு தலையணையால் முகத்தை அமுக்கி கொலை செய்தது தெரிய வந்தது.
இந்த கொலையில் அதே ஊரைச் சேர்ந்த செல்வரதி 23 கைது செய்யப்பட்டார்.