ADDED : அக் 31, 2024 03:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நயினார்கோவில்: ராமநாதபுரம் மாவட்டம்பரமக்குடி அருகே நயினார்கோவிலில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து செல்லும் போது இரு கிராமத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் போலீஸ்காரரின் மண்டை உடைக்கப்பட்டது.
நயினார்கோவில் பகுதியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலை உள்ளது. இங்கு நேற்று காலை அஞ்சாமடை மற்றும் அக்கிரமேசி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மாலை அணிவிக்கச் சென்றனர்.
அப்போது இரண்டு கிராம இளைஞர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறியது. பின்னர் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கிக் கொண்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பிரபாகரன் என்ற போலீஸ்காரரின் தலையில் தாக்கியதில் காயம் அடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

