sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

போலீசார் நடவடிக்கை எடுக்காதது மக்களுக்கு செய்யும் துரோகம்: அண்ணாமலை குற்றச்சாட்டு

/

போலீசார் நடவடிக்கை எடுக்காதது மக்களுக்கு செய்யும் துரோகம்: அண்ணாமலை குற்றச்சாட்டு

போலீசார் நடவடிக்கை எடுக்காதது மக்களுக்கு செய்யும் துரோகம்: அண்ணாமலை குற்றச்சாட்டு

போலீசார் நடவடிக்கை எடுக்காதது மக்களுக்கு செய்யும் துரோகம்: அண்ணாமலை குற்றச்சாட்டு

19


ADDED : மார் 16, 2026 02:01 PM

Google News

19

ADDED : மார் 16, 2026 02:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, பொதுமக்களுக்குச் செய்யும் துரோகம் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை: சேலம் கோரிமேடு அருகே, 66 வயது மூதாட்டியை, கஞ்சா போதையில் இரண்டு பேர் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. திமுகவின் ஐந்து ஆண்டு கால ஆட்சியில், தமிழகம் முழுவதும் கஞ்சா புழக்கம் பெருகியுள்ளது.

பள்ளி, கல்லூரிகள் கூட கஞ்சா புழக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் பின்விளைவுகள் மிகவும் அச்சமூட்டுகின்றன. நமது குழந்தைகள் எதிர்காலம் குறித்து பயம் ஏற்படுகிறது. எங்கெங்கு கஞ்சா விற்பனை நடக்கிறது என்பது பள்ளி செல்லும் மாணவர்களுக்குக் கூட தெரிந்திருக்கிறது. ஆனால், காவல்துறைக்குத் தெரியவில்லை என்பதை ஏற்க முடியாது.

கஞ்சா விற்பனையின் பின்னணியில், பெரும்பாலும் திமுகவினர் இருப்பதால், ஐந்து ஆண்டுகளாக, போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கைகள் கட்டப்பட்டு இருந்ததைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், இதற்கு மேலும் போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, பொதுமக்களுக்குச் செய்யும் துரோகம்.

உடனடியாக, தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கஞ்சா புழக்கத்தை முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us