தமிழ் பண்பாட்டை அழிக்க நினைக்கும் அரசியல் எதிரிகள்: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
தமிழ் பண்பாட்டை அழிக்க நினைக்கும் அரசியல் எதிரிகள்: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
ADDED : ஜன 24, 2026 06:38 AM

சென்னை: 'தமிழ்ப் பண்பாட்டை அழிக்க நினைக்கும் அரசியல் எதிரிகளையும், அந்த எதிரிகளின் கூலிப் பட்டாளமாகி விட்ட அடிமைகளையும் எதிர்கொண்டு, வெற்றியை உறுதி செய்யும் களமாக சட்டசபை தேர்தல் அமையும்' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தி.மு.க., தொண்டர்களுக்கு, அவர் எழுதிஉள்ள கடிதம்: வரும் சட்டசபை தேர்தல் ஆரிய - திராவிட போரின் மற்றொரு களம். அந்தக் களத்தில், தி.மு.க., தலைமையில் சமூக நீதி, மத நல்லிணக்கம், மாநில உரிமைகளை லட்சியமாக கொண்ட கொள்கை கூட்டணி வலிமையுடன் களத்தில் நிற்கிறது.
தமிழ்ப் பண்பாட்டை அழிக்க நினைக்கும் அரசியல் எதிரிகளையும், அந்த எதிரிகளின் கூலிப் பட்டாளமாகி விட்ட அடிமைகளையும் எதிர்கொண்டு, வெற்றியை உறுதி செய்யும் களமாக வரும் சட்டசபைத் தேர்தல் அமையும்.
நாளை, மாநிலம் முழுவதும் நடக்கஉள்ள மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று, தமிழ் இன, மொழி எதிரிகளை வீழ்த்த உறுதியேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

