ADDED : டிச 16, 2024 12:16 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: 'எனது அரசியல் ஆசான் திருமாவளவன்; அவரது அறிவுரைகளை ஏற்று பயணிப்பேன்' என விடுதலை சிறுத்தைக் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் திட்டம் உள்ளதா என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'எதிர்கால திட்டம் குறித்து ஆலோசித்து விரைவில் அறிவிப்பேன். எங்கு இணைகிறேன் என்பதை விட என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கிறேன்' என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜூனா பதில் அளித்தார்.
மேலும், அவர் கூறியதாவது: திருமாவளவன் வார்த்தைக்கு கட்டுப்பட்டு, அவரது அறிவுரையை ஏற்று பயணிப்பேன். எனது அரசியல் ஆசான் திருமாவளவன். அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுள்ளேன். இவ்வாறு ஆதவ் அர்ஜூனா கூறினார்.