ஓட்டு வாங்குவதில் பி.எச்டி பட்டம் பெற்ற அரசியல்வாதிகள்: அண்ணாமலை பேச்சு
ஓட்டு வாங்குவதில் பி.எச்டி பட்டம் பெற்ற அரசியல்வாதிகள்: அண்ணாமலை பேச்சு
ADDED : ஜூன் 27, 2025 10:21 PM

நாகர்கோவில்: '' நயமாக பேசி ஓட்டு வாங்குவதில் அரசியல்வாதிகள் பி.எச்டி., பட்டம் பெற்றுள்ளனர். அவர்களால் எந்த பயனும் இல்லை,'' என பா.ஜ.,வின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், 200 ஆண்டுகள் பழமையான, வைகுண்டபுரம் ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் அண்ணாமலை பேசியதாவது: உலகத்தில் கடவுள் வந்து ராஜாவாக இருந்து ஆட்சி செய்து எப்படி அந்த ஆட்சி இருக்க வேண்டும் எனக் காட்டியவர் கடவுள் ராமர். இதனால் ராமராஜ்ஜியம் என சொல்கிறோம். இதனால் தான் ராமர் கடவுளாக இருந்து மனிதனாக இருந்து ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டுள்ளார்.
மக்களாட்சியில் இருக்கும் போது மன்னர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ராமர் ஒரு இலக்கணம்.அநியாயம் நடந்த போது எப்படி நடந்து கொண்டார்; சட்டதிட்டத்தை எப்படி காப்பாற்றினார்;அவருடைய தந்தை கொடுக்கிறேன் என சொன்ன பதவியை கொடுக்காத போது எப்படி நடந்து கொண்டார் என பார்க்க வேண்டும்.பகலில் போனால் மக்கள் தடுப்பார்கள் என்பதற்காக இரவில் காட்டுக்குள் சென்றார்.பகலில் சென்றால் தடுத்து விடுவார். ராமர் வாழ்க்கையில் ஒரு ஒரு விஷயமும் ஒரு குணத்தை சொல்லி கொடுக்கிறது.
தம்பியிடம், பெற்றோரிடம், மன்னராக எப்படி நடந்து கொண்டார்;எதிரியாக இருந்தாலும் எப்படி சண்டை போட்டார்; யுத்த்தை எப்படி நடத்தினார்;சிஷ்யர்களிடம் எப்படி நடத்தினார் என்பதையும் பார்க்க வேண்டும்.
ராமரின் வாழ்க்கையில் குணாதிசயங்களை குந்தைகளிடம் சொல்லிக் கொடுக்க வேண்டும்.ஸ்ரீராமரை போல் இருக்கவேண்டும் என்பதற்காக குழந்தைகளுக்கு ராமரின் பெயரை வைக்கிறோம். கடவுளின் குணாதிசயங்களை வர வேண்டும் என்பதற்காக..
தமிழகத்தில் இருக்கும் ஆட்சி ஊறுகாய் அளவுக்கு கூட ராமராஜ்ஜியமாக இல்லை. குடும்பத்தில் எப்படி ராமர் இருந்தார் என்பதற்கும்; இன்று ஆட்சியாளர்கள் குடும்பம் இன்று அவர்களே ஆட்சியாக இருக்கிறார்கள் என்பதற்கும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்
எங்கேயோ ஒரு இடத்தில் யாருக்கோ ஒரு பிரச்னை வந்தால் மன்னர் துடிப்பார். ஆனால், மக்களுக்கு ஒரு பிரச்னை வந்தால் ஆட்சியாளர்கள் துடிக்கிறார்கள் என்றால் கிடையாது.
ஆட்சியாளர்கள், மக்களிடம் எப்படி பேச வேண்டும்.என்ன பேசினால் கேட்பார்கள் என்பதில் 100 மார்க் வாங்கிவிட்டார்.தேர்தலின் போதும், ஓட்டு வாங்கும் போது, தேர்தல் முடிந்து ஒராண்டு எப்படி பேச வேண்டும் என அரசியல்வாதிகளுக்கு தெரியும்.
அரசியல்வாதி ஐந்தாண்டுகளில் பேசுவதை பார்க்க வேண்டும். ஓட்டு வாங்கிய பிறகு ஏளனமாக இருப்பார்கள். 3வது வருடத்தில் இருந்து பக்கத்தில் வந்துவிடுவார்கள். ஐந்தாவது ஆண்டில் ஊர்விழா, தெருவிழாவுக்கு வந்துவிடுவார்கள்.
எப்படி நயமாக பேசி ஓட்டை வாங்க வேண்டும் என்பதில் சில அரசியல்வாதிகள் பிஎச்டி பட்டம் பெறும் அளவுக்கு அரசியல்வாதிகள் தெளிவாகி விட்டார்கள்.அவர்களால், அவர்களுக்கும், மக்களுக்கும், சமூகத்திற்கும் ஒரு பைசா பிரயோஜனம் கிடையாது.சிந்தித்து ஓட்டுப்போட வேண்டும். எந்த கட்சி எப்படிப்பட்ட தலைவன் என்ன மாற்றத்தை கொடுக்க போகிறார் என சி்ந்திக்க வேண்டும்.நீங்கள் போடும் ஓட்டு நமக்கானது அல்ல. குழந்தைகளுக்கானது. உங்களுக்கான ஓட்டை உங்கள் பெற்றோர்கள் ஓட்டு போட்டு விட்டனர்.
நீங்கள் எப்படி, ஒரு மாநிலத்தில் வாழ வேண்டும் என்பதை உங்களின் தந்தையும், தாயும் ஓட்டுப்போட்டுவிட்டனர்.இன்றைக்கு நீங்கள் ஓட்டுப்போடுவது உங்கள் குழந்தைகளுக்கானது. எப்படிப்பட்ட மாநிலத்தில் வாழ வேண்டும் என்பதற்காக ஓட்டுப்போட உள்ளீர்கள்.எந்த மாற்றமும் 5 ஆண்டுகளில் நடக்காது.சனாதன தர்மத்தை பேணி காக்க வேண்டும் என நினைத்தால், ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.இவ்வாறு அண்ணாமலை பேசினார்.