ADDED : ஜூன் 30, 2025 02:31 AM

கோவை: கோவையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் அளித்த பேட்டி:
பள்ளிகளில் மதம் சார்ந்த அடையாளங்கள் இருப்பதால், பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். சில நேரங்களில், சட்டம் - ஒழுங்கு பிரச்னை கூட ஏற்படுகிறது.
இதனால் தான், மாணவர்கள் மத அடையாளங்களோடு பள்ளிக்கு வருவது கூடாது என, நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. உடனே, இதை வைத்து சிலர் அரசியல் செய்யப் பார்க்கின்றனர்.
ஒவ்வொருவருக்கும் ஒரு மதம் சார்ந்த நம்பிக்கை இருக்கிறது. அதை யாரும் குறைசொல்ல முடியாது; அதில், தலையிடவும் முடியாது. ஆனால், பள்ளி என்பது பொதுவான இடம். முற்போக்கு சிந்தனையுடன் கல்வி கற்றுக்கொடுக்க மட்டுமே ஆலோசனை வழங்கப்படுகிறது. மத நம்பிக்கையில், யாரும் தலையிட போவதில்லை.
'நீட்' தேர்வு எழுத வரும்போது, தாலிச்செயினை கூட, கழற்றி வைத்துவிட்டு வர வேண்டுமென கூறுகின்றனர். ஆனால், தமிழக அரசு மதச்சார்பின்மையோடு எந்த காரியம் செய்தாலும், அதை விமர்சிக்க வந்து விடுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.