கோவையில் 2 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தம்:ஓட்டுச்சாவடி வளாகத்தில் காத்திருந்த பெண்கள்
கோவையில் 2 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தம்:ஓட்டுச்சாவடி வளாகத்தில் காத்திருந்த பெண்கள்
ADDED : ஏப் 19, 2024 08:05 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கஸ்தூரிபாளையம் தொடக்கப்பள்ளியில் இன்று மாலை வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறால் இரண்டு மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது.
பின்னர், அதே பகுதியில் உள்ள வெள்ளமடை வாக்குச்சாவடியில் இருந்து உபரியாக இருந்த வாக்கு பதிவு இயந்திரம் கொண்டுவரப்பட்டு இரண்டு மணி நேரத்துக்கு பிறகு வாக்குப்பதிவு தொடர்ந்து நடந்தது. இதற்காக காத்திருந்த வாக்காளர்கள், 240 பேருக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டன.

