sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மதுரை, கோவை, திருச்சியில் 'ஸ்மார்ட்' அங்காடிகள் திட்ட அறிக்கைக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அழைப்பு

/

மதுரை, கோவை, திருச்சியில் 'ஸ்மார்ட்' அங்காடிகள் திட்ட அறிக்கைக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அழைப்பு

மதுரை, கோவை, திருச்சியில் 'ஸ்மார்ட்' அங்காடிகள் திட்ட அறிக்கைக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அழைப்பு

மதுரை, கோவை, திருச்சியில் 'ஸ்மார்ட்' அங்காடிகள் திட்ட அறிக்கைக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அழைப்பு


ADDED : அக் 13, 2025 01:48 AM

Google News

ADDED : அக் 13, 2025 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கோவை, மதுரை மற்றும் திருச்சியில், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில், 'ஸ்மார்ட்' அங்காடி வளாகங்கள் அமைப்பதற்கு, திட்ட அறிக்கை தயாரிக்க, கல்வி நிறுவனங்களுக்கு மாசு கட்டுப்பாடு வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.

தமிழக அரசு, கரியமில வாயு உமிழ்வு தடுப்புக்கு மட்டுமின்றி, திடக்கழிவுகள் மேலாண்மைக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது.

வீடுகளில் உருவாகும் திடக்கழிவுகளை, மேலாண்மை செய்வதற்காக, பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன.

அதுமட்டுமல்லாது, தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், உள்ளாட்சி அமைப்பு கள் என்ற அடிப்படையில், திடக்கழிவு மேலாண்மை விதிகளும் உள்ளன.

பெரும் சவால் அந்த வகையில், காய், கனி, மலர் மொத்த விற்பனை அங்காடி வளாகங்களுக்கு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டியது அவசியமாகிறது. கோயம்பேடு போன்ற பெரிய அளவிலான அங்காடி வளாகங்களில், திடக்கழிவு மேலாண்மை பெரும் சவாலாக உள்ளது.

இதில், காய்கறி கழிவுகளை பயன்படுத்தி, மின்சாரம் தயாரிப்பு உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இருப்பினும், கரியமில வாயு உமிழ்வு கட்டுப்பாடு பணிகள் சவாலாகவே இருக்கின்றன.

இந்நிலையில், கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில், சூழலியல் பாதிப்பு இல்லாமல், திடக்கழிவு மேலாண்மைக்கான திட்டம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டு, அந்தப் பணி, சென்னை ஐ.ஐ.டி.,யிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து, பிற நகரங்களிலும், 'ஸ்மார்ட்' அங்காடி வளாகங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, கோவை, மதுரை மற்றும் திருச்சி நகரங்களில், சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத வகையில், 'ஸ்மார்ட்' அங்காடி வளாகங்கள் அமைக்க, உள்ளாட்சிகள் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மழைநீர் சேகரிப்பு, எரி சக்தி சேமிப்பு, திடக்கழிவுகள் உருவாவதை கட்டுப்படுத்துவது, கரியமில வாயு உருவாக்கத்தை குறைப்பது என்ற அடிப்படையில், இந்த வளாகங்கள் இருக்கும்.

இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்து உள்ளது.

பொதுவாக தனியார் கலந்தாலோசனை நிறுவனங்களுக்கே இந்த வாய்ப்பு அளிக்கப்படும்.

அந்த நடைமுறைக்கு மாற்றாக, காலநிலை மாற்றம் தொடர்பான விவகாரங்களில், ஆர்வமாக உள்ள கல்வி நிறுவனங்களை, இதில் ஈடுபடுத்த மாசு கட்டுப்பாடு வாரியம் நடவடிக்கை எடுத்து உள்ளது.






      Dinamalar
      Follow us