UPDATED : ஜன 05, 2024 08:10 PM
ADDED : ஜன 05, 2024 07:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சி.டி.,பிரிவு ஊழியர்களுக்கான பொங்கல் போனஸ் ரூ.3,000 வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் தெரிவித்து இருப்பதாவது: சி,டி,பிரிவை சேர்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் ரூ.3,000 பொங்கல் போனஸ் வழங்கப்படும். மேலும் சி,டி, பிரிவை சேர்ந்த ஓய்வூதியர்கள், முன்னாள் கிராம அலுவலர்களுக்கு ரூ.500 பொங்கல் பரிசு வழங்கப்படும். தொகுப்பூசிய பணியாளர்களுக்கு ரூ.1000 பொங்கல் போனஸ் வழங்கப்படும். இதன் மூலம் அரசுக்கு ரூ167.68 கோடி செலவாகும் இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.