sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இதுவரை பொங்கல் பரிசு ரூ.3000 பெறாதவர்களுக்கு நாளை கடைசி வாய்ப்பு: தமிழக அரசு அறிவிப்பு

/

இதுவரை பொங்கல் பரிசு ரூ.3000 பெறாதவர்களுக்கு நாளை கடைசி வாய்ப்பு: தமிழக அரசு அறிவிப்பு

இதுவரை பொங்கல் பரிசு ரூ.3000 பெறாதவர்களுக்கு நாளை கடைசி வாய்ப்பு: தமிழக அரசு அறிவிப்பு

இதுவரை பொங்கல் பரிசு ரூ.3000 பெறாதவர்களுக்கு நாளை கடைசி வாய்ப்பு: தமிழக அரசு அறிவிப்பு


ADDED : ஜன 13, 2026 03:36 PM

Google News

ADDED : ஜன 13, 2026 03:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பொங்கல் பரிசு மற்றும் ரு.3000 பெறாத பயனாளிகள் நாளை அனைத்து ரேஷன் கடைகளிலும் அதை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் கொண்டாடும் வகையில் அரசு சார்பில் ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பொங்கல் பரிசை ஒவ்வொரு குடும்பமும் பெறும் வகையில் ஜன 4 முதல் ஜன 7 வரை வீடுகளுக்கே டோக்கன் வழங்கப்பட்டது.

அதன் பின்னர் ஜன12ம் தேதி வரை 24,924 ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பணம் வினியோகம் நடைபெற்று வந்தது. ஏற்கனவே அறிவித்தபடி, பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகமானது இன்றுடன் (ஜன.13) முடிவதாக இருந்தது.

இந் நிலையில், நாளை (ஜன.14) அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுவரை இந்த தொகுப்பை பெறாதவர்கள் நாளைய தினம் அந்தந்த ரேஷன் கடைகளுக்குச் சென்று பெற்றுக் கொள்ளலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.






      Dinamalar
      Follow us