ADDED : ஜன 05, 2026 02:57 AM
அண்மையில் கோவையில் நடந்த இயற்கை விவசாய நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி வந்தார். தற்போது, பா.ஜ., விவசாய அணி சார்பில், ஈரோட்டில் துவங்கியுள்ள மாநில விவசாயிகள் மாநாட்டில், மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்கிறார். கடந்த தேர்தலின்போது, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதாக தி.மு.க., உறுதியளித்தது. ஆனால், இப்போது புதிதாக ஒரு ஓய்வூதிய திட்டத்தை, அதுவும் அரசு ஊழியர்களின் கடும் போராட்டம் தந்த அழுத்தம் காரணமாக அறிவித்திருக்கிறது.
தேர்தலை மனதில் கொண்டு, முதல்வர் ஸ்டாலின் ஏதாவது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். பொங்கல் பரிசு தொகுப்பை ஊழல் இல்லாமல் தரமானதாக வழங்க வேண்டும். 'அப்பா' என்று தன்னை அழைத்துக் கொள்ளும் முதல்வர் ஸ்டாலின், போதை பொருட்களை கட்டுப்படுத்துவதில், தன் பொறுப்பை ஏற்றுக் கொள்ளாமல், மத்திய அரசையும், பெற்றோரையும் கைகாட்டுகிறார்.
- வானதி சீனிவாசன், எம்.எல்.ஏ., - பா.ஜ.,

