ADDED : ஜன 09, 2025 06:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம், தாளிக்கல் கிராமத்திலிருந்து பணவட்டம்பாடி கிராமம் வரை, 3 கி.மீ.,க்கு சாலை அமைக்க கோரி அப்பகுதி மக்கள், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வந்தனர். நீண்ட நாட்களுக்கு பின், 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நேற்று முன்தினம் இரவு திடீரென சாலை அமைத்தனர்.
சாலை அமைத்து ஒரு நாள் கூட முழுமையாக நிறைவடையாத நிலையில், சேதமடைந்து ஆங்காங்கே பிளவு ஏற்பட்டு, பெயர்ந்து வருகிறது. தரமற்ற முறையில் சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுத்து, தரமான சாலை அமைத்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

