முதுநிலை 'பிசியோதெரபி' படிப்பு சிறப்பு பாடப்பிரிவாக மாற்றம்
முதுநிலை 'பிசியோதெரபி' படிப்பு சிறப்பு பாடப்பிரிவாக மாற்றம்
ADDED : செப் 19, 2026 11:17 PM

சென்னை: முதுநிலை 'பிசியோதெரபி' மற்றும் முதுநிலை செயல்முறை துணை மருத்துவப் படிப்புகள், இனி ஒரே பட்டமாக இல்லாமல், சிறப்பு பாடப்பிரிவுகளாக மாற்றப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக, யு.ஜி.சி., வெளியிட்ட அறிவிப்பு:
நடப்பு கல்வியாண்டு முதல் எம்.பி.டி., எனும், முதுநிலை பிசியோதெரபி, எம்.ஓ.டி., எனும் முதுநிலை செயல்முறை மருத்துவம் ஆகிய பட்டப்படிப்புகள் ஒரே பட்டப்படிப்பாக வழங்கப்படாது.
எம்.பி.டி., பட்டப்படிப்பு, எட்டு சிறப்பு பாடப்பிரிவாகவும், எம்.ஓ.டி., ஒன்பது சிறப்பு பாடப்பிரிவாகவும் இனி கற்பிக்கப்படும். முந்தைய கல்வியாண்டு சேர்ந்த மாணவர்களுக்கு, இது பொருந்தாது.
இதன்படி, எம்.ஓ.டி., நரம்பியல் அறிவியல், மனநலம், மறுவாழ்வு, கை சிகிச்சை என பல சிறப்பு பாடப்பிரிவுகளாகவும், எம்.பி.டி., பிசியோதெரபி படிப்பில், விளையாட்டு அறிவியல், இதய - நுரையீரல் அறிவியல், தசைக்கூட்டு அறிவியல், நரம்பியல் துறை என சிறப்பு பாடப்பிரிவுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
மேலும், பி.ஓ.டி., மற்றும் பி.பி.டி., படிப்பு களின் கால அளவு, நான்கரை ஆண்டுகளில் இருந்து, ஐந்து ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
