உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : செப் 19, 2026 11:21 PM

அ நிறம் | அளவு
சென்னை: மலேஷியாவில், முனைவர் பட்டம் படிக்கும் மாணவர் பாரதிதாசன், 'இரண்டாம் ஆண்டு படிப்பிற்கு, தமிழக அரசு கல்வி உதவித் தொகை வழங்கவில்லை' என, சமூக வலைதளத்தில் 'வீடியோ' வெளியிட்டார்.
அதை சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர், அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து, ஓரிரு நாட்களுக்குள் உதவித்தொகை அனுப்பப்படும் என, நேற்று முன்தினம் காலையில், அமைச்சர் வன்னி அரசு தெரிவித்தார்.
இந்நிலையில், அம்பேத்கர் அயலக கல்வி உதவித் திட்டத்தின் கீழ், நடப் பாண்டிற்கான உதவித் தொகை, 23.95 லட்சம் ரூபாய் நேற்று முன்தினம் ஒரே நாளில் விடுவிக்கப்பட்டு உள்ளதாக, சமூக நீதித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
