ADDED : பிப் 13, 2025 07:55 PM

சிவகங்கை:சிவகங்கையில் செங்கோட்டையனுக்கு ஆதரவாகவும், பழனிசாமிக்கு எதிராகவும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
அ.தி.மு.க., பொதுச்செயலரான பழனிசாமிக்கு விவசாயிகள் சார்பில் நடந்த பாராட்டு விழா மேடை மற்றும் பேனர்களில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் இல்லை. இதுகுறித்து, செங்கோட்டையன் அதிருப்தி தெரிவித்து, அந்நிகழ்ச்சிக்குச் செல்லாமல் புறக்கணித்தார். முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவும் கட்சியில் தன்னை புறக்கணிப்பதாக, கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் வெளிப்படையாக தன்னுடைய அதிருப்தியை வெளியிட்டார்.
இதை தொடர்ந்து, நேற்று சிவகங்கை மாவட்டத்தில், செங்கோட்டையனுக்கு ஆதரவாகவும் பழனிசாமியை கண்டித்தும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. பழனிசாமிக்கு எதிராக சிவகங்கையில் பன்னீர்செல்வம் அணியினர் அவ்வப்போது போஸ்டர் ஒட்டுவது வழக்கம். தற்போது செங்கோட்டையனுக்கு ஆதரவாகவும், பழனிசாமிக்கு எதிராகவும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது, அ.தி.மு.க., நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
''வழக்கம் போல், இதுவும் பன்னீர்செல்வம் ஆதரவாளர்களின் வேலை தான்,'' என, பழனிசாமி ஆதரவு அ.தி.மு.க.,வினர் தெரிவிக்கின்றனர்.

