தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ தேர்தல் சிறப்பு பார்வையாளராக பிரதாப் சிங் நியமனம்

 தேர்தல் சிறப்பு பார்வையாளராக பிரதாப் சிங் நியமனம்

 தேர்தல் சிறப்பு பார்வையாளராக பிரதாப் சிங் நியமனம்


ADDED : மார் 24, 2026 07:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 24, 2026 07:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் சிறப்பு பார்வையாளராக பிரதாப் சிங் நியமிக்கப்பட்டு உள்ளதாக, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தேர்தல் கமிஷன் அறிக்கை: தமிழக சட்டசபை தேர்தல் பணிகளுக்கு சிறப்பு பார்வையாளராக, பிரதாப் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆயகர் பவன் இணைப்பு கட்டடத்தின், 412வது அறை அவருக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. அவரை, 044 - 2833 8378 என்ற தொலைபேசி வாயிலாகவும், 78453 21461 என்ற மொபைல் போன் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.

மேலும், splobs.pelecd@tn.gov.in என்ற இணையதள முகவரி வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம். பொது மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள், தேர்தல் தொடர்பான விவகாரங்கள் குறித்து சிறப்பு பார்வையாளரை தொடர்பு கொள்ளலாம்.

பிரதாப் சிங்கின் தொடர்பு அலுவலரை, 95513 22999 என்ற மொபைல் போன் வாயிலாக அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us