ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பே வந்த பிரவீன் சக்கரவர்த்தி
ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பே வந்த பிரவீன் சக்கரவர்த்தி
ADDED : மே 22, 2026 07:38 AM
பதவியேற்பு நடந்த லோக் பவன் பாரதி மண்டபத்திற்கு சரியாக காலை, 10:00 மணிக்கு கவர்னர் அர்லேக்கர் வந்தார். அவரை முதல்வர் விஜய், தலைமை செயலர் சாய்குமார் மற்றும் ஏற்கனவே பதவியேற்ற ஒன்பது அமைச்சர்கள் வரவேற்றனர்
காலை 10:07 மணிக்கு வந்தே மாதரம், தேசிய கீதம் , தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. தலைமை செயலர் சாய்குமார், புதிய அமைச்சர்களின் பெயர்களை வாசிக்க, ஒவ்வொருவராக பதவியேற்றனர்
முதலில் துாத்துக்குடி எம்.எல்.ஏ., ஸ்ரீநாத்தும், கடைசியாக கிணத்துக் கடவு எம்.எல்.ஏ., விக்னேஷும் பதவியேற்றனர். 23 அமைச்சர்களும் ஆண்டவன் மீது ஆணையிட்டு, பதவிப் பிரமாண உறுதிமொழி எடுத்தனர்
அமைச்சர்கள் காந்திராஜ், ரஞ்சித்குமார் ஆகியோர், ஆண்டவன் மீது ஆணையிட்டு என கூறிய பின், முதல்வர் விஜயை நோக்கி வணங்கினர்
காங்கிரஸ் சார்பில் அமைச்சராக பதவியேற்ற ராஜேஷ்குமார், 'பெருந்தலைவர் காமராஜர் நாமம் வாழ்க, ராஜிவ் காந்தி நாமம் வாழ்க, ராகுல் காந்தி வாழ்க' என்று முழக்கமிட்டார்.
அமைச்சர் தென்னரசு பதவியேற்கும் முன், 'தளபதியின்றி நானில்லை' என்று கூறினார். பதவியேற்றதும், 'என்றும் தளபதிக்கும், தலைமைக்கும் உண்மை விசுவாசி' என்றார்.
பதவி யேற்ற அமைச்சர்களுக்கு பூங்கொத்து கொடுத்து, வாழ்த்து தெரிவித்த கவர்னர், அவர்களை முதுகில் தட்டிக் கொடுத்தார். போட்டோவுக்கு போஸ் கொடுக்க, முதல்வர் விஜயையும் அ ழைத்துக் கொண்டார்.
காங்கிரஸ் சார்பில் அமைச்சரான விஸ்வநாதனிடம், கவர்னர் ஏதோ கூற அவர் சிரித்தார். கவர்னர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்திய போது, முதல்வர் விஜயை அருகே வருமாறு விஸ்வநாதன் அழைத்தார்
பதவியேற்பு விழா நடந்த அரங்கம் சிறியது என்பதால், பலரும் சுற்றிலும் நின்று கொண்டிருந்தனர். அரங்கின் வெளியே அமைக்கப்பட்டிருந்த பந்தலில் பத்திரிகையாளர்கள், விருந்தினர்கள் அமர வைக்கப்பட்டிருந்தனர். அங்கு பதவியேற்பு விழா நிகழ்வுகள், பெரிய டிஜிட்டல் திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டன
போதிய அளவு குடிநீர் ஏற்பாடு செய்யப்படாததால், பத்திரிகையாளர்கள், விருந்தினர்கள் சிரமப்பட்டனர்
அமைச்சர்களாக பதவியேற்ற சிலர் வயதில் மிகவும் இளைஞர்கள் என்பதால் மனைவி, கைக்குழந்தையுடன் வந்திருந்தனர்
சட்டசபை தேர்தலில், த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என வலியுறுத்திய காங்கிரஸ் தரவு பகுப்பாய்வு பிரிவு தேசியத் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பே பதவியேற்பு விழாவுக்கு வந்து விட்டார்; உற்சாகமாக அனைவருடனும் கைகுலுக்கி மகிழ்ந்தார்.
பதவியேற்பு விழா முடிந்ததும், 23 அமைச்சர்களும் அரசு கார்களில் புறப்பட்டு சென்றனர்.
தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள, முதல்வர் மற்றும் 32 அமைச்சர்களில், ஆதவ் அர்ஜுனா தவிர, மற்ற அனைவரும் கடவுள் பெயரில் பதவியேற்பு உறுதிமொழி எடுத்தனர்.
