ADDED : ஏப் 20, 2026 07:08 AM

தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா, ஆன்மிகத்தில் அதிக நம்பிக்கை கொண்டவர். முக்கிய செயல்களுக்கு ஜோதிடர்களிடம் ஆலோசனை கேட்பார். தி.மு.க., கூட்டணியையும், அப்படித்தான் அவர் முடிவு செய்தார். ஆனால், அவரது பேச்சே, கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதனால், உஷாரான அவர் ஏதோ பிரச்னை இருப்பதாக கருதி, ஜோதிடர் ஆலோசனையை மீண்டும் நாடினார். சோழியை உருட்டி பிரச்னம் பார்த்த கேரள ஜோதிடர், பிரேமலதா தங்கத்திற்கு பதிலாக, வெள்ளி, வைரம், பிளாட்டினம் நகைகள் அணியலாம் எனக் கூறி உள்ளார்.
அவரது ராசிப்படி, அவற்றை அணிந்தால் மட்டுமே வெற்றி கைகூடும்; நினைத்தது நடக்கும்; பதவிகள் தேடி வரும் எனக் கூறியுள்ளார். இதையடுத்து, வைரம் மற்றும் பிளாட்டின நகைகளை அணிந்து, பிரேமலதா பிரசாரம் செய்ய தொடங்கியுள்ளார்.
சமீபத்தில், விருத்தாசலம் தொகுதியில் பிரசாரம் செய்த தி.மு.க., துணைப் பொதுச்செயலர் கனிமொழியும், பிரேமலதாவின் நகை, ஆடை அலங்காரம் சிறப்பாக இருப்பதாக வாழ்த்தியுள்ளார்.
