தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ஐந்து ஒலிம்பிக் பயிற்சி மையங்கள் கட்டுமான ஏற்பாடுகள் தொடக்கம்

ஐந்து ஒலிம்பிக் பயிற்சி மையங்கள் கட்டுமான ஏற்பாடுகள் தொடக்கம்

ஐந்து ஒலிம்பிக் பயிற்சி மையங்கள் கட்டுமான ஏற்பாடுகள் தொடக்கம்


UPDATED : நவ 18, 2026 09:48 PM

ADDED : நவ 18, 2026 09:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 18, 2026 09:48 PM ADDED : நவ 18, 2026 09:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை உள்ளிட்ட ஐந்து இடங்களில், ஒலிம்பிக் பயிற்சி மையங்கள் அமைப்பதற்கான முன்னேற்பாடுகளை, தமிழக அரசு தொடங்கி உள்ளது.

ஒலிம்பிக் போட்டியில், தமிழக வீரர்கள் பங்கேற்க, அவர்களுக்கு பயிற்சி அளிக்க, தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக முதல் கட்டமாக, சென்னை, திருவண்ணாமலை, கோவை, நாகப்பட்டினம், பரமக்குடி ஆகிய இடங்களில், ஒலிம்பிக் பயிற்சி மையங்கள் அமைக்க உள்ளது. இதற்காக, சென்னையில் 15 ஏக்கர், திருவண்ணாமலையில் 10 ஏக்கர், கோவையில் 20 ஏக்கர், நாகப்பட்டினத்தில் 12 ஏக்கர், பரமக்குடியில் 7.50 ஏக்கர் நிலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து, கட்டுமான வடிவமைப்பு, திட்ட மதிப்பீடு உள்ளிட்டவற்றை தயாரிக்க, கட்டடக் கலை நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான பணிகளை, பொதுப்பணித்துறை தொடங்கி உள்ளது.

இதற்கிடையே, தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, டில்லியில் நேற்று, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்தார். அப்போது, 2036ல் ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்தினால், தமிழகத்தில் படகுப் போட்டி, அலைச்சறுக்கு போட்டிகளை நடத்த வாய்ப்பு வழங்க வேண்டும். மேலும், 2029ம் ஆண்டு தேசிய விளையாட்டுப் போட்டிகளை, தமிழகத்தில் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தார். இதற்கான கட்டமைப்பு திட்டங்களுக்கு, மத்திய அரசின் நிதியுதவியும் கோரப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us