கனமழையை சமாளிக்க ஏற்பாடுகள் தயார்: கே.கே.எஸ்.எஸ்.ஆர்., அறிவிப்பு
கனமழையை சமாளிக்க ஏற்பாடுகள் தயார்: கே.கே.எஸ்.எஸ்.ஆர்., அறிவிப்பு
ADDED : நவ 25, 2024 07:26 PM

சென்னை: '' அதிகனமழை பெய்வதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால், டெல்டா மாவட்டங்களில் தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது,'' என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறினார்.
மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு நாளையும், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு நாளை மறுநாளும் அதிகனமழை பெய்வதற்கான 'ரெட் அலர்ட் ' எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்து உள்ளது.
இது தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியதாவது: டெல்டா மாவட்டங்களில் இரண்டு நாட்கள் மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்து உள்ளது. மாவட்ட நிர்வாகங்களுக்கு வேண்டிய அறிவுரையை முதல்வர் வழங்கி உள்ளார். அங்கு தகுந்த முன்னேற்பாடுகளை செய்துள்ளோம். மக்களுக்கு பாதிப்பு இல்லாத அளவிற்கு வேண்டிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பிரச்னை வந்தால் மக்கள் தங்க வேண்டிய இடத்தை தயார் நிலையில் வைத்துள்ளோம். எந்த பிரச்னை வந்தாலும் அரசு சமாளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.