/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
செப். 3ல் தமிழகம் வருகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
/
செப். 3ல் தமிழகம் வருகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
செப். 3ல் தமிழகம் வருகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
செப். 3ல் தமிழகம் வருகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
ADDED : ஆக 27, 2025 03:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:ஜனாதிபதி திரவுபதி முர்மு, செப்டம்பர், 3ம் தேதி தமிழகம் வருகிறார்.
திருவாரூரில் உள்ள மத்திய பல்கலையின், பத்தாவது பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
இவ்விழாவில், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குவதுடன், படிப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு தங்க பதக்கங்களையும் முர்மு வழங்க உள்ளார்.
டில்லியில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டரில், திருவாரூர் மத்திய பல்கலை செல்கிறார்.
முன்னதாக, ஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.