டைம்லைன்
தற்போதைய செய்தி
டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
மாவட்டம்
ADDED : செப் 03, 2026 06:15 AM
சிவகங்கை மாவட்டம், கீழடி அருகே, கடந்த 17ம் தேதி கொந்தகை கண்மாயில் கணேசன் என்பவரும், 23ம் தேதி சட்டக் கல்லுாரி மாணவர் ஒருவரும் கொல்லப்பட்டனர். கீழடி காவல் நிலையம் அருகே கண்ணன் என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இளைஞர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவது, மக்களிடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது; பாதுகாப்பு குறித்த கவலையையும் வெளிப்படுத்துகிறது. பழிக்குப் பழி, கும்பல் வன்முறை போன்றவற்றால் இளைஞர்களின் உயிர் பறிக்கப்படுவதை, எந்த வகையிலும் ஏற்க முடியாது. இந்த சம்பவங்களில், குற்றவாளிகள் யாராக இருந்தாலும், கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, ஆயுத கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். - ரவி பச்சமுத்து, தலைவர், இந்திய ஜனநாயக கட்சி