திருச்செந்துார் கோவில் உண்டியலில் திருடிய அர்ச்சகர், பக்தருக்கு 'காப்பு'
திருச்செந்துார் கோவில் உண்டியலில் திருடிய அர்ச்சகர், பக்தருக்கு 'காப்பு'
UPDATED : அக் 20, 2026 08:21 PM
ADDED : அக் 20, 2026 06:56 PM
துாத்துக்குடி:
திருச்செந்துார், கோவில் உண்டியலில் பணம் திருடிய அர்ச்சகர் முத்தன், 74, பக்தர் திருமுருகன், 54, ஆகிய இருவரை, போலீசார் கைது செய்தனர்.
துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் காணிக்கை அக்., 10ல் எண்ணப்பட்டது. மூலவர் எதிரே உள்ள உண்டியலில், பணம் குறைவாக இருந்ததால், அங்குள்ள 'சி.சி.டி.வி' கேமரா காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அதில், கோவில் அர்ச்சகர் முத்தன், உண்டியல் வாயில் பகுதியில் துணியை கட்டி, நுாதன முறையில் பணம் திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதேபோல, கோவில் செப்பு கொடிமரம் முன் உள்ள உண்டியலில், புதுச்சேரி, அரியாங்குப்பத்தை சேர்ந்த பக்தர் திருமுருகன் என்பவரும், பணம் திருடியது தெரிந்தது.
புகாரில், போலீசார், இருவரையும் கைது செய்தனர். வயது மூப்பால் முத்தனை, காவல் நிலைய சொந்த ஜாமினில் போலீசார் விடுவித்தனர். பேரூரணி சிறையில் திருமுருகன் அடைக்கப்பட்டார்.
