ADDED : டிச 01, 2025 06:08 AM

பிரதமர் மோடியின், 'மனதின் குரல்' நிகழ்ச்சியில், தமிழகம் தனி சிறப்பிடம் பெற்றது, மகிழ்ச்சி அளிக்கிறது. இயற்கை வேளாண்மை மாநாட்டை துவங்கி வைக்க, கோவைக்கு வருகை புரிந்ததை, மோடி நினைவு கூர்ந்தார்.
உலகின் பழமையான மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியும், உலகின் பழமையான நகரங்களில் ஒன்றான காசியும், ஒன்றாக சங்கமிக்கும், 'காசி தமிழ் சங்கமம்' நாளை துவங்குவதாக அறிவித்தார்.
இதன் கருப்பொருள் 'தமிழ் கற்கலாம்' என தெரிவித்த, மோடியின் தமிழ் நேசமும், அவர் தமிழ் மொழி மீது கொண்டுள்ள பற்றும், ஆச்சரியப்பட வைக்கின்றன.
தமிழை, வெறும் அரசியல் மொழியாக மட்டுமே பயன்படுத்தி வரும் சில தமிழக தலைவர்களுக்கு மத்தியில், தமிழ் தாய்மொழியாக இல்லாவிட்டாலும், அதன் மீது அளவற்ற அன்பு வைத்திருக்கும் பிரதமர், உண்மையில் ஓர் அதிசய மகான்.
நயினார்
நாகேந்திரன்
தலைவர், தமிழக பா.ஜ.,

