ADDED : ஜூலை 11, 2025 09:51 PM
சென்னை:கங்கைகொண்ட சோழபுரத்தில் நடக்கும் ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி வரும் 27, 28ல் அரியலுார் மாவட்டம் வர உள்ள தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஈடுபட்டுள்ளார். கடந்த ஏப்ரலில் சென்னை வந்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை சந்தித்து, பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியை அறிவித்தார்.
கடந்த மாதம் மதுரை வந்த அமித் ஷா, தமிழக பா.ஜ., நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று, சட்டசபை தேர்தல் பணி தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, வரும் 27ம் தேதி அரியலுார் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த நாள், கங்கைகொண்ட சோழபுரத்தில் நடக்க உள்ள ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக தெரிகிறது.