ADDED : மே 21, 2025 04:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: முன்னணி நிறுவனங்களில், இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்க, பிரதமர் மோடி தலைமையிலான, மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட, பிரதமரின் தொழிற்பயிற்சி திட்டத்தின் கீழ், தேசிய அளவில் அதிக வாய்ப்பை பெற்று, தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.
ஓராண்டு தொழிற்பயிற்சியுடன் மாதம், 5,000 ரூபாய் உதவித்தொகை, ஆண்டுக்கு ஒருமுறை, 6,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் இடத்தின் கீழ், 15,785 வாய்ப்புகளை தமிழகம் பெற்றுள்ளது.
இதனால், பல ஆயிரக்கணக்கான இளைஞர்களின் வேலைவாய்ப்பு திறன் மேம்படுத்தப்பட்டு உள்ளது. இதுபோன்று, பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் வாயிலாக, தமிழர்களின் நலனை காத்து, வளர்ச்சி பாதையில் தொடர்ந்து வழிநடத்தி செல்லும், பிரதமர் மோடிக்கு நன்றி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.