பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகை; 12 ஆயிரம் இருக்கைகளுடன் பந்தல்
பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகை; 12 ஆயிரம் இருக்கைகளுடன் பந்தல்
ADDED : ஏப் 03, 2025 06:01 AM

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் விழாவுக்காக 12 ஆயிரம் இருக்கைகளுடன் பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணி முழுவீச்சில் நடக்கிறது.
ஏப்.,6ல் பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். அன்று ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் தமிழ்நாடு அரசு தங்கும் விடுதி வளாகத்தில் பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. இவ்விழாவில் பிரதமர் மோடி சிறப்புரை ஆற்றுகிறார்.
இந்த இடத்தில் கடந்த 3 நாட்களாக மண் அள்ளும் இயந்திரம் மூலம் சீரமைக்கப்பட்டு 12 ஆயிரம் பொதுமக்கள் அமரும் வகையில் இருக்கைகளுடன் பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணி முழுவீச்சில் நடக்கிறது.
பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் நின்றபடி பிரதமர் மோடி புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்து ரயில் போக்குவரத்தை கொடியசைத்து துவக்கி வைக்கிறார். இந்த இடத்தை நேற்று பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை (எஸ்.பி.ஜி.,) அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
எஸ்.பி., சந்தீஷ், டி.ஆர்.ஓ., கோவிந்தராஜுலு ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினர். பின் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் வந்த எஸ்.பி.ஜி., அதிகாரிகள் பிரதமர் சுவாமி தரிசனம் செய்யும் பகுதியை ஆய்வு செய்து பாதுகாப்பு குறித்து கோயில் அதிகாரிகளுடன் ஆலோசித்தனர்.

