UPDATED : மார் 15, 2024 12:02 PM
ADDED : மார் 15, 2024 07:11 AM

நாகர்கோவில் : அகஸ்தீஸ்வரத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர்  மோடி கன்னியாகுமரி வந்தார். பொதுக்கூட்டத்தில் தமிழ் சகோதர, சகோதரிகளே வணக்கம் என தமிழில் பேசி பேச்சை துவக்கினார்.
கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லுாரி மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச உள்ளார். இன்று காலை குமரி விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் பிரதமர் வந்தார்.
அங்கிருந்து காரில் மேடைக்கு வரும் பிரதமர் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார். மார்ச் 18-ல்  கோவையிலும், 19ல் சேலத்திலும் நடக்கும் பொதுக் கூட்டங்களில் பிரதமர் பேசுகிறார்.
இதற்காக திருநெல்வேலி, துாத்துக்குடி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து நான்காயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். பிரதமரின் பாதுகாப்பு படையினரும் முகாமிட்டுள்ளனர்.

