கோடி தீர்த்தத்தை அயோத்திக்கு எடுத்துச் செல்லும் பிரதமர்
கோடி தீர்த்தத்தை அயோத்திக்கு எடுத்துச் செல்லும் பிரதமர்
ADDED : ஜன 21, 2024 03:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
-ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் குருக்கள் சரவணன் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். சுவாமிக்கு நடந்த அபிேஷகம், தீபாராதனையில் பங்கேற்றார். பர்வதவர்த்தினி அம்மன், விநாயகர், மகாதேவர் , காசிவிஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் உள்ளிட்டோரையும் வழிபட்டார். அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
சேது புராணங்களில் அக்னி தீர்த்த கடலில் நீராடி கோயில்களில் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடி ராமநாதசுவாமியை வழிபட்டால் நமது பாவங்கள் நீங்கும் என கூறப்பட்டுள்ளது. தீர்த்தங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது 22 வதான கோடி தீர்த்தம். கோயிலில் கோடி தீர்த்தத்தை அயோத்தி கோயிலுக்கு எடுத்து செல்ல இருப்பதாக பிரதமர் தெரிவித்தார் என்றார்.

