உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஏப் 19, 2026 01:41 AM
அ நிறம் | அளவு
சென்னை: மத்திய அரசின் பெரு நிறுவன விவகாரங்களுக்கான துறை சார்பில், பிரதமரின், 'இன்டர்ன்ஷிப்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ், நாடு முழுதும் 500 நிறுவனங்களில், கல்லுாரி இறுதியாண்டு மாணவ, மாணவியருக்கு, மாதந்தோறும் ஊக்கத் தொகையுடன், 'இன்டர்ன்ஷிப்' வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில், ஐ.ஐ.டி., -- ஐ.ஐ.எம்., தவிர்த்து, மற்ற பல்கலை, கல்லுாரி இளநிலை, முதுநிலை மாணவ - மாணவியர் விண்ணப்பிக்கலாம் என, பல்கலை மானியக்குழுவான யு.ஜி.சி., தெரிவித்துள்ளது.
விருப்பம் உள்ளோர், https://pminternship.mca.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு மாதமும் 9,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும்.
