sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பிரதமரின் சூரியசக்தி மின் நிலைய திட்டம்; மானியம் கொடுத்தும் தமிழகத்தில் ஆர்வம் இல்லை

/

பிரதமரின் சூரியசக்தி மின் நிலைய திட்டம்; மானியம் கொடுத்தும் தமிழகத்தில் ஆர்வம் இல்லை

பிரதமரின் சூரியசக்தி மின் நிலைய திட்டம்; மானியம் கொடுத்தும் தமிழகத்தில் ஆர்வம் இல்லை

பிரதமரின் சூரியசக்தி மின் நிலைய திட்டம்; மானியம் கொடுத்தும் தமிழகத்தில் ஆர்வம் இல்லை


ADDED : பிப் 08, 2026 06:38 AM

Google News

ADDED : பிப் 08, 2026 06:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, ஒரு கிலோ வாட்டிற்கு, 30,000 ரூபாய் மானியம் வழங்கும் மத்திய அரசின் திட்டத்தின் கீழ், தமிழகத்தில், 25 லட்சம் வீடுகளில் மின் நிலையம் அமைக்க, மின் வாரியம் திட்டமிட்டது. ஆனால், இரு ஆண்டுகளில், 60,000 வீடுகளில் மட்டுமே மின் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத சூரியசக்தி மின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும், வீடுகளில் மின் கட்டண செலவை குறைக்கவும், 'பி.எம்.சூர்ய கர் - முப்த் பிஜிலி யோஜனா' எனப்படும் சூரிய வீடு இலவச மின் திட்டத்தை, 2024 பிப்ரவரியில் மத்திய அரசு துவக்கியது.

ஒதுக்கீடு செய்யவில்லை


இத்திட்டத்தின் கீழ் நாடு முழுதும், 1 கோடி வீடுகளில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.

இதன்படி, ஒரு கிலோ வாட் திறனில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, 30,000 ரூபாய், 2 கிலோ வாட்டிற்கு, 60,000 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. அதற்கு மேல் கிலோ வாட்டிற்கு, 18,000 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.

பிரதமரின் திட்டத்தின் கீழ் தமிழகத்தில், 25 லட்சம் வீடுகளில், சூரியசக்தி மின் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதில் கடந்த மாதம் வரை, 60,000 வீடுகளில் மட்டுமே சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பிரதமரின் திட்டத்தின் கீழ் சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, மாநில வாரியாக இவ்வளவு இணைப்புகள் என்று, ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப, அந்த மின் நிலையங்களை அமைக்க, மத்திய அரசு மானியம் வழங்குகிறது.

நாடு முழுதும் கடந்த ஜன., வரை பிரதமரின் திட்டத்தின் கீழ், 28 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் வீடுகளில் அதிகளவில் சூரியசக்தி மின்சாரம் பயன்படுத்தினால், மின் வாரியத்தின் சுமை குறையும். அதற்கு ஏற்ப, மின் தேவையை பூர்த்தி செய்ய, தனியாரிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்வதை, மின் வாரியமும் குறைக்கும்.

ரூ70,000 செலவு

எனவே தான், பிரதமரின் திட்டத்தில், 25 லட்சம் வீடுகளில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், மக்களிடம் ஆர்வம் இல்லை. ஒரு கிலோ வாட் திறனில், மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்க சராசரியாக, 60,000 - 70,000 ரூபாய் செலவாகிறது.

இதில் மத்திய அரசு மானியம் வழங்குவது போல், தமிழக அரசும் குறிப்பிட்ட தொகையை மானியாக வழங்கினால், மின் நிலையம் அமைக்க மக்களிடம் ஆர்வம் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

வீடுகளில் சூரியசக்தி மின் நிலையம் அமைத்துள்ள 'டாப் 10' மாநிலங்கள் மாநிலம் - வீடுகளின் எண்ணிக்கை குஜராத் - 7.42 லட்சம் மஹாராஷ்டிரா - 6.35 லட்சம் உ.பி., - 3.30 லட்சம் கேரளா - 1.82 லட்சம் ராஜஸ்தான் - 1.25 லட்சம் ஆந்திரா - 87,500 ம.பி., - 87,000 அசாம் - 72,650 உத்தரகண்ட் - 62,000 தமிழகம் - 60,000








      Dinamalar
      Follow us