sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 முதல்வருக்கு ஆதரவாக முருகன்: சேகர்பாபு புது தகவல்

/

 முதல்வருக்கு ஆதரவாக முருகன்: சேகர்பாபு புது தகவல்

 முதல்வருக்கு ஆதரவாக முருகன்: சேகர்பாபு புது தகவல்

 முதல்வருக்கு ஆதரவாக முருகன்: சேகர்பாபு புது தகவல்


ADDED : பிப் 08, 2026 06:39 AM

Google News

ADDED : பிப் 08, 2026 06:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''தமிழகம் வரும் பிரதமர் மோடி, அறுபடை வீடுகளான பழனி, திருச்செந்துாருக்கு செல்ல வேண்டும்,'' என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

சென்னையில் அவர் அளித்த பேட்டி:

நாட்டில் என்ன நடக்கிறது என்பது அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு தெரியவில்லை. சட்டசபையில் இருக்கும்போது ஒரு நிலைப்பாடு; வெளியே பேசும்போது ஒரு நிலைப்பாடு. அதுவும், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்த பின், முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாடு.

நுாறு நாள் வேலைவ ா ய்ப்பு என்பது வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் வாழ்வாதாரத்திற்கு மிகப்பெரிய உதவியாக உள்ளது. அந்த திட்டத்தை சீர்குலைத்து, பல்வேறு ஷரத்துகளை அதில் கொண்டு வந்து சேர்த்து, மக்களை ஏமாற்றுவதற்காக, 125 நாட்களாக மாற்றி இருக்கிறது மத்திய அரசு.

இந்த திட்டத்தை சீர்குலைத்த மத்திய அரசை கண்டித்து, பழனிசாமி தான் போராட்டம் நடத்த வேண்டும். ஆனால், எங்கள் முதல்வர் ஸ்டாலின், போராட்டம் அறிவித்துள்ளார்.

அதனால், அவர் பின்னால் பழனிசாமி நிற்க வேண்டும். வேல் எடுத்து பார்த்தனர்; திருப்பரங்குன்றத்தை கையில் எடுக்க பார்த்தனர். முருகனுக்கு மாநாடு நடத்தினர். ஆனால், என்னப்பன் தமிழ் கடவுள் முருகன், எங்கள் முதல்வருக்கு ஆதரவாக நிற்கிறார்.

தமிழகம் வரும் பிரதமர் மோடி, அறுபடை வீடு களான பழனி, திருச்செந்துாருக்கு செல்ல வேண்டும்; அங்கெல்லாம் நிர்வாகம் எப்படி நடக்கிறது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு சேகர்பாபு கூறினார்.






      Dinamalar
      Follow us