ADDED : ஏப் 06, 2025 01:15 AM
சென்னை:பிரின்ஸ் ஜுவல்லரி, அக் ஷய திருதியை தினத்தை முன்பதிவுடன் கொண்டாடுகிறது. அதன்படி வாடிக்கையாளர்கள், 1,000 ரூபாய் மட்டும் செலுத்தி, விருப்பமான நகைகளை, இன்றைய தங்கம் விலையில் தேர்வு செய்து, அக் ஷய திருதியை நாளான வரும், 30ம் தேதி வாங்கிக் கொள்ளலாம்.
இந்த சிறப்பு திட்டத்தின்படி, பிரின்ஸ் ஜுவல்லரி, வாடிக்கையாளர்கள் வாங்கும் ஒவ்வொரு எட்டு கிராம் தங்கத்திற்கும், 2,000 ரூபாய் மதிப்புள்ள இலவச தங்கத்தை வழங்குகிறது.
தங்கம் விலை நிலவரம், ஏற்ற, இறக்கங்களுடன் காணப்படுவதால், இந்த தனித்துவமான சலுகை வாயிலாக வாடிக்கையாளர்கள், தங்கள் ஆபரணங்களுக்கு மிகச்சிறந்த மதிப்பை பெறுவது உறுதி செய்யப்படுகிறது.
முன்பதிவு திட்டத்தின் பயன்களை பெற, வாடிக்கையாளர்கள், பிரின்ஸ் ஜுவல்லரியின் ஏதேனும் ஷோரூமுக்கு செல்லாம். 'ஆன்லைனில்' பதிவு செய்யலாம்.
சலுகையுடன் பிரின்ஸ் ஜுவல்லரி, இந்த சுப தினத்துக்கு என்று உருவாக்கப்பட்ட புதிய நகைகளின் தொகுப்பையும் வழங்குகிறது.
நுண்ணிய கலை வேலைப்பாட்டுடன் உருவாக்கப்பட்ட தங்க நெக்லஸ், தோடுகள், 'பென்டன்ஸ்' என, ஒவ்வொரு ஆபரணமும் சுபிட்சத்தையும், சவுபாக்கியங்களையும் அளிக்கக்கூடியவை.