ADDED : ஜன 04, 2026 02:25 AM
சென்னை: 'ரயில் மீது கல் வீசினால், ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்' என, ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த அந்த்யோதயா ரயில், நேற்று முன்தினம் ஆரல்வாய்மொழி அருகே வந்தபோது, மர்மநபர்கள் ரயில் மீது கற்களை வீசினர்.
இதில், ஐந்தாவது பெட்டியின், ஜன்னல் கண்ணாடி உடைந்து, பெண் பயணி ஒருவருக்கு, தலை மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டது. சம்பந்தப்பட்டவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இது குறித்து, ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறியதாவது:
ர யில் பெட்டிகள் மற்றும் பயணியருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில், கல்வீச்சு உள்ளிட்ட, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரை தடுக்க, ரயில் தண்டவாளங்களுக்கு அருகில் உள்ள கிராமவாசிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கல் வீச்சில் ஈடுபடுவோருக்கு, ஓராண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

