sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கேரள சிறையில் தப்பிய கைதி காரைக்குடி காதலியுடன் கைது

/

கேரள சிறையில் தப்பிய கைதி காரைக்குடி காதலியுடன் கைது

கேரள சிறையில் தப்பிய கைதி காரைக்குடி காதலியுடன் கைது

கேரள சிறையில் தப்பிய கைதி காரைக்குடி காதலியுடன் கைது


ADDED : பிப் 24, 2024 06:51 AM

Google News

ADDED : பிப் 24, 2024 06:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடியில் உள்ள பாரதி நகரைச் சேர்ந்தவர் அப்சரா, 27. இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனியாக வசித்து வருகிறார். காலேஜ் ரோட்டில் டாட்டூ கடை நடத்தி வருகிறார். இவரது தாய் கேரளாவைச் சேர்ந்தவர் என்பதால் அடிக்கடி கேரளாவுக்கு சென்று வந்தார். அப்போது ஹர்ஷத், 33. என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

கடந்த செப்., மாதம் ஹர்ஷத் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை பெற்று கண்ணுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அப்சரா சிறைக்கு சென்று அவரை அடிக்கடி பார்த்து வந்தார். ஜன.,14 மத்திய சிறையில் இருந்து ஹர்ஷத் தப்பினார். கேரளா போலீசார் தேடி வந்த நிலையில், அப்சராவுடன், ஹர்ஷத் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது.

காரைக்குடிக்கு வந்த கேரள போலீசார், ஏ.எஸ்.பி., ஸ்டாலின் உதவியோடு அப்சராவை கைது செய்து விசாரித்தனர். அப்சராவின் வீட்டில் ஹர்ஷத் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. அவரை காரைக்குடி போலீசார் கைது செய்து, கேரளா போலீசாரிடம் ஒப்படைத்தனர். இருவரையும் போலீசார் கைது செய்து கேரளா அழைத்துச் சென்றனர்.

10 கிலோ தங்கம் கடலில் வீச்சு


இலங்கையில் இருந்து மன்னார் வளைகுடா கடல் வழியாக மண்டபம் வேதாளைக்கு தங்கக்கட்டிகள் சிலர் கடத்தி வருவதாக, திருச்சி மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படையினரிடம் அவர்கள் தெரிவித்தனர்.

நேற்று அதிகாலை, வேதாளை கடற்கரை நோக்கி பைபர் கிளாஸ் படகு ஒன்று மண்டபம் வந்தது. இந்திய கடலோரக் காவல் படை ரோந்து கப்பலில் இருந்த வீரர்கள், அந்த படகை மடக்கினர். படகில் இருந்த ஒருவர் தங்கக் கட்டிகளை கடலில் வீசி விட்டு, கடலில் குதித்து நீந்தி தப்பினார். படகில் இருந்த இரு கடத்தல்காரர்களை இந்திய வீரர்கள் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையின்படி, கடலில் வீசப்பட்டது, 6.25 கோடி ரூபாய் மதிப்புள்ள, 10 கிலோ தங்கக்கட்டி என்பது தெரிந்தது. அதையடுத்து, ஸ்கூபா நீச்சல் பயிற்சி பெற்ற இந்திய வீரர்கள், கடலோர காவல் படையினர், மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் கடலில் குதித்து நேற்று முதல் தேடினர். எனினும், இரவு வரை கிடைக்கவில்லை.

சிறுமி, வாலிபர் மர்ம சாவு


தஞ்சாவூர் மாவட்டம், வண்டுவாஞ்சேரி கிராமத்தை சேர்ந்த மதியழகன் மகன் திலீபன், 20, விவசாய கூலி. இவர் அதே பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும், 16 வயது சிறுமியை காதலித்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த திலீபனின் தந்தை மதியழகன், 'அந்த பெண் உனக்கு தங்கை முறை; அவரை காதலிக்காதே' என கண்டித்துள்ளார். மீறி இருவரும் காதலித்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, சிறுமியை திலீபன் தனியாக சந்தித்துள்ளார். வெகு நேரமாகியும் வீட்டிற்கு சிறுமி வராததால், சிறுமியின் தாய் சென்று பார்த்த போது, சிறுமி முகம், கழுத்து மற்றும் உடலில் பல இடங்களில் ரத்த காயங்களுடன் தரையில் கிடந்தார். திலீபனும் அருகிலுள்ள வேப்பமரத்தில் தன் லுங்கியில் துாக்கிட்டு இறந்து கிடந்தார்.

அதிர்ச்சியடைந்த பெண்ணின் தாய் அலறினார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன், இருவரையும் நாச்சியார்கோவில் அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். இருவரும் இறந்து விட்டதாக, டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சாவு குறித்து, நாச்சியார்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.

ரூ.5,000 லஞ்சம்; வி.ஏ.ஓ., கைது


திருப்பூர் மாவட்டம், மூலனுாரைச் சேர்ந்தவர் சேகரன், 48; விவசாயி. இவருக்கு சொந்தமான நிலத்திற்கான பட்டாவை மாற்றம் செய்ய, மூலனுார் வி.ஏ.ஓ., சண்முகம், 45, என்பவரை அணுகினார். இதற்காக 5,000 ரூபாயை லஞ்சமாக சண்முகம் கேட்டார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத சேகரன், இதுகுறித்து திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாருக்கு தகவல் அளித்தார். போலீசார் ஆலோசனையின்படி, ரசாயனம் தடவிய, 5,000 ரூபாய் நோட்டுகளை வி.ஏ.ஓ., சண்முகத்திடம் கொடுத்த போது, மறைந்திருந்த போலீசார், சண்முகத்தை கைது செய்தனர்.

இரும்பு கம்பியால் தாக்கி 60 பவுன், பணம் கொள்ளை வழக்கு: கைது 2


சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே கல்லுவழியில் இரும்பு ராடுடன் வீட்டிற்குள் புகுந்து 5 பேரை தலையில் தாக்கி, பீரோவில் இருந்த 60 பவுன், பணத்தை கொள்ளையடித்த இருவரை 28 நாட்களில் போலீசார் கைது செய்தனர். தேவகோட்டை அருகே தென்னீர்வயலில் பதுங்கியிருந்த அக்கிராமத்தை சேர்ந்த தினேஷ்குமார் 30, கணபதி 32, இருவரையும் தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.

தாய் சித்ரவதை செய்த குழந்தைக்கு சிகிச்சை


சென்னை, மேடவாக்கம் அடுத்த, பெரும்பாக்கத்தை சேர்ந் தவர் ஸ்ரீதேவி- - -கனகராஜ் தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளன. நேற்று முன்தினம், 2 வயது மகன் தர்ஷன் கீழே விழுந்ததில், தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறி, பள்ளிக்கரணையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார்.

குழந்தை தர்ஷன் உடல் முழுதும் காயங்கள் இருந் தது. போலீசார் விசாரணையில், ஸ்ரீதேவி, குழந்தை தர்ஷனின் உடலில் சூடு வைத்து கொடுமைப்படுத்தியது தெரிய வந்தது.

பெட்ரோல் குண்டு வீசிய சிறுவர்கள் இருவர் கைது


சென்னை, முகப்பேர், வேணுகோபால் தெருவில், சவுண்டு சர்வீஸ் கடை ஒன்று உள்ளது. நேற்று அதிகாலை, இந்த கடைக்கு எதிரில், 17 வயது மதிக்கத்தக்க சிறுவர்கள் இருவர், போதையில் தகராறில் ஈடுபட்டனர்.

சவுண்டு சர்வீஸ் கடையில் இருந்த சிறுவன் இதை தட்டிக் கேட்டதால், இருவரும் சேர்ந்து சிறுவனை தாக்கிவிட்டு தப்பியுள்ளனர். இதுகுறித்து அந்த சிறுவன், நொளம்பூர் போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில், தப்பிச் சென்ற இரு சிறுவர்களும் திரும்பி வந்து, சவுண்டு சர்வீஸ் கடை முன் பெட்ரோல் குண்டு வீசினர்.

தகவலறிந்து வந்த போலீசார், சிறுவர்கள் இருவரையும் கைது செய்தனர். விசாரணையில், 'போலீசில் புகார் அளித்ததால், கடையின் முன் பெட்ரோல் குண்டு வீசியதாக, அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

நக்சலைட்கள் தாக்குதலில் இருவர் பலி


சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்சலைட் நடமாட்டம் அதிகமுள்ளது. இங்குள்ள காஹேர் துல்ஹத் கிராமத்தில் நேற்று நக்சலைட்கள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து, பொதுமக்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். போலீசாருக்கு தங்களைப் பற்றிய தகவல்களை கொடுத்ததாக சந்தேகித்து, இருவரையும் நக்சலைட்கள் கொலை செய்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

சமாஜ்வாதி பிரமுகர் வீட்டில் ரெய்டு


உத்தர பிரதேசத்தில், 750 கோடி ரூபாய் வங்கிக் கடன் மோசடி வழக்கில், சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ., வினய் ஷங்கர் திவாரிக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் அமலாக்கத் துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

திரிணமுல் நிர்வாகி கட்டடத்துக்கு தீ வைப்பு


மேற்கு வங்கத்தின் சந்தேஷ்காலியில், தலைமறைவாக உள்ள ஆளும் திரிணமுல் காங்., நிர்வாகி ஷாஜஹான் ஷேக்கின் சகோதரர் சிராஜுக்கு சொந்தமான கட்டடத்தை, அப்பகுதி மக்கள் தீ வைத்து எரித்ததால் பதற்றம் நிலவியது.






      Dinamalar
      Follow us