ADDED : மார் 10, 2026 03:39 AM
கோட்டக்குப்பம்: தேனி மாவட்டம், கெங்குவார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரம்மசந்திரன் மகன் அருண்பாண்டியன், 22; இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். தன்னுடன் பணிபுரியும் சசிக்குமார் என்பவரின் பிறந்த நாளைக் கொண்டாட சக ஊழியர்களுடன் நேற்று முன்தினம் ஆரோவில் வந்துள்ளார்.
இங்கு பொம்மையார்பாளையம் தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியபோது மது அருந்தினார். அதிகமாக மது அருந்தியதால் வெகுநேரம் மயங்கிய நிலையில் கிடந்தார்.
சந்தேகமடைந்த நண்பர்கள் அவரை எழுப்ப முயன்றபோது, அவர் இறந்தது தெரியவந்தது. கோட்டக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அருண்பாண்டியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காலாப்பட்டு பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
