உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஜூலை 09, 2026 12:19 AM
அ நிறம் | அளவு
சென்னை: தமிழகத்தில், ஹட்சன் நிறுவனம் வாயிலாக, பால், தயிர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பால் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிறுவனத்தின் ஆரோக்யா பால் விலை இன்று முதல் உயர்த்தப்படுகிறது.
அதன்படி, 500 மி.லி., நிறை கொழுப்பு பால் பாக்கெட் விலை இரண்டு ரூபாய் உயர்த்தப் படுகிறது. அதாவது, 500 மி.லி., பால் பாக்கெட் 41 ரூபாயில் இருந்து 43 ரூபாய்க்கு விற்கப்படும்.
தயிர் 500 மி.லி.,க்கு இரண்டு ரூபாய், ஒரு லிட்டருக்கு மூன்று ரூபாய் உயர்த்தப்படுவதாக, அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பல தனியார் நிறுவனங்களும், பால் மற்றும் பால் பொருட்கள் விலையை உயர்த்த திட்ட மிட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
