சென்னையில் பிப்ரவரி மாதம் முதல் தனியார் மினி பஸ்களுக்கு அனுமதி
சென்னையில் பிப்ரவரி மாதம் முதல் தனியார் மினி பஸ்களுக்கு அனுமதி
ADDED : ஜன 23, 2025 01:11 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னையின் முக்கிய பகுதிகளில் வரும் பிப்ரவரி மாதம் முதல் தனியார் மினி பஸ்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் மக்கள் தொகை அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், போக்குவரத்து வசதிகளின் தேவை அதிகரித்துள்ளது. அந்தவகையில், மெட்ரோ ரயில்கள், மின்சார ரயில்கள், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது, முக்கிய பகுதிகளில் வரும் பிப்ரவரி மாதம் முதல் தனியார் மினி பஸ்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பந்தூர், வளசரவாக்கம், மணலியில் தனியார் மினி பஸ்களை இயக்க போக்குவரத்துறை அனுமதி வழங்கி உள்ளது. இதற்கு அறிவிப்பை விரைவில் போக்குவரத்து துறை வெளியிடும். அப்போது, தனியார் பஸ்கள் இயக்கப்படும் வழிகள், நேரங்கள் உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும்.