உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 10, 2026 06:53 PM
ADDED : அக் 10, 2026 05:55 PM
அ நிறம் | அளவு
திருவண்ணாமலை: ஆரணி அருகே, தனியார் பள்ளி பஸ் கவிழ்ந்த விபத்தில், பள்ளி ஊழியர் இளங்கோ, 58, பலியானார்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆகாரம் கிராமத்தில், ஜம்பு மகரிஷி மெட்ரிக் மேநிலைப்பள்ளி இயங்குகிறது. நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து, மாணவ – மாணவியரை ஏற்றிக்கொண்டு ஏத்துவாம்பாடி கிராமம் நோக்கி பள்ளி பஸ் சென்றது.
பஸ்சை குமரன், 45, என்பவர் ஓட்டினார். பள்ளி ஊழியர் இளங்கோ உடன் சென்றார். மாலை, 6:30 மணி அளவில் ஏத்துவாம்பாடி அருகே பஸ் சென்றபோது, நிலைத்தடுமாறி வயலில் கவிழ்ந்தது. இதில் குமரன், 4 மாணவர்கள், இளங்கோ ஆகியோர் காயமடைந்தனர்.
அவர்களை மீட்ட பொதுமக்கள், களம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அன்றிரவு, இளங்கோ உயிரிழந்தார். களம்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
