வாகன வடிவமைப்பு போட்டி வெற்றி பெறும் மூவருக்கு பரிசு
வாகன வடிவமைப்பு போட்டி வெற்றி பெறும் மூவருக்கு பரிசு
ADDED : ஆக 07, 2025 01:27 AM

சென்னை:வாகன வடிவமைப்பில் ஆர்வம் உள்ள இளைஞர்கள், மாணவர்களுக்காக, 'டி.வி.எஸ்., இன்டஸ் டிசைன் ஹானர்ஸ்' என்ற பெயரில், வாகன வடிவமைப்பு போட்டியை, 'டி.வி.எஸ்., மோட்டார் நிறு வனம்' அறிவித்துள்ளது.
போட்டியில் பங்கேற்போர், நவீன காலத்திற்கு ஏற்ப, படைப்பாற்றலையும், கலாசாரத்தையும் இணைக்கும் வகையில், ஒன்று, இரண்டு அல்லது மூன்று சக்கர வாகன முன்மாதிரிகளை வடிவமைக்க வேண்டும்.
அதேசமயம், ராஜஸ்தானின் 'தார்' பாலைவனம், நாட்டின் மேற்கு மற்றும் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை, குஜராத்தில் உள்ள உப்பு பாலைவனப் பகுதியான கட்ச் மற்றும் இந்தியாவின் பெருநகரமான மும்பை ஆகியவற்றை, கருப்பொருளாக வைத்து, வாகனங்கள் வடிவமைக்கப்பட வேண்டும்.
இப்போட்டியில் வெற்றி பெறும் முதல் மூன்று பேருக்கு, ஐந்து லட்சம் ரூபாய் வரை பரிசு வழங்கப்பட உள்ளது. கூடுதலாக, பார்வையாளர்களின் தேர்வு என்ற தனி விருதும் வழங்கப்படும். . கூடுதல் விபரங்கள் www.tvsindus.com என்ற இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன.