ADDED : டிச 17, 2025 06:28 AM

சென்னை: பிரச்னைக்குரிய கைதிகளை சிறை மாற்றம் செய்ய, சிறைத் துறை இயக்குநர் மகேஷ்வர் தயாள் சர்மா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து, சிறைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த ஆண்டு சிறைகளில் கைதிகள் மோதல் சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. இந்த ஆண்டு புழல் பெண்கள் சிறையில், கைதிகள் மோதல் உட்பட பல சம்பவங்கள் நடந்துள்ளன.
பெண் கைதிகளின் தற்கொலை எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே, மாநிலம் முழுதும் உள்ள சிறைகளில் ஆய்வு செய்ய வேண்டும்.
பிரச்னைக்குரிய கைதிகளை சிறை மாற்றம் செய்ய வேண்டும் என, சிறை அலுவலர்களுக்கு, சிறைத்துறை இயக்குநர் மகேஷ்வர் தயாள் சர்மா உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, முதல் கட்டமாக, திருநெல்வேலி மாவட்டம், பாளையங் கோட்டை மத்திய சிறையில் இருந்து, 11 கைதிகள் வெவ்வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

