ADDED : டிச 17, 2025 06:28 AM

'அ.தி.மு.க., ஆட்சி யில் துவங்கப்பட்ட 11 மருத்துவ கல்லுாரி களில் முறைகேடு எதுவும் இல்லை என தமிழக அரசு கூறியிருப்பது, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனி சாமிக்கு, தி.மு.க., அரசு அளித்துள்ள நற்சான்றிதழ்' என, அ.தி.மு.க., கூறியுள்ளது.
இது தொடர்பாக, அ.தி.மு.க., வெளியிட்டுள்ள அறிக்கை: பழனிசாமி முதல்வராக இருந்தபோது கொண்டு வந்த 11 மருத்துவ கல்லுாரிகளில் முறைகேடு என தி.மு.க., வைத்த பொய் குற்றச்சாட்டில், துளிகூட முகாந்திரம் இல்லை என்று தற்போது தி.மு.க., அரசே தெரிவித்துள்ளது. முந்தைய பழனி சாமி அரசுக்கு, தி.மு.க., அரசு நற்சான்றிதழ் வழங்கியுள்ளது.
உயர்தர மருத்துவ கட்டுமானத்தை மக்களிடம் சேர்த்து, எளிய மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கும் 11 மருத்துவ கல்லுாரிகள் திட்டத்தில் கூட, தங்கள் அற்ப அரசியலுக்காக பொய் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசியது தி.மு.க., இத்தகைய சதி திட்டங்களால், மக்களுக்காக உழைக்கும் நேர்மையான தலைவரான பழனிசாமியை ஒருபோதும் வீழ்த்த முடியாது என்பதை தெரிந்து கொள்ளட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

