ADDED : செப் 26, 2024 02:18 AM
சென்னை:புழல் மத்திய சிறைகளில், கைதிகளை பார்க்க, முன்பதிவு செய்வதற்கான பிரத்யேக தொடர்பு எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள விசாரணை கைதிகளை, அவர்களின் உறவினர்கள் மூன்று நாட்கள் பார்க்கலாம்.
குண்டர் தடுப்பு சட்டம் மற்றும் தண்டனை கைதிகளை இரண்டு நாட்கள் பார்க்கலாம். இதற்கு, ஆதார், குடும்ப அட்டை நகலை எடுத்து வர வேண்டும்.
வெகு துாரத்தில் இருந்து வருவோரால், கைதிகளை பார்க்க முடியவில்லை. கூட்ட நெரிசல் காரணமாக காத்திருக்க வேண்டி உள்ளது.
இதை தவிர்க்க, தமிழக சிறைகளில் கைதிகளை பார்க்க வரும் உறவினர்கள், முன்பதிவு செய்யும் வசதி அறிமுகமாகியுள்ளது.
முதற்கட்டமாக, சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை பார்க்க, முன்பதிவுக்கு, 044 - 2659 0000 என்ற பிரத்யேக எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என, சிறைத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

